Y
உலகத்தின் பார்வையில் ஏதோ இஸ்ரேலும், ஈரானும் ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட்டுக் கொள்வது போலத் தெரிகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல.
ஈரான் தனித்து நின்று போர் செய்கிறது. இஸ்ரேலுக்கு கூட்டாக பல நாடுகள் உதவுகின்றன.
இஸ்ரேலைத் தாக்க ஈரான் ஏவுகணைத் தொகுதி ஒன்றை ஏவுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவை குருவிக்கூட்டம் போல மேற்கு நோக்கி பாயும்போது, பாரசீக வளைகுடாவில் பாஹ்ரைன் தீவில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை முடிந்த அளவுக்கு இடைமறிப்பு செய்கிறது.